அனுபவங்கள்

ஆய்வுரைத் திலகம் முனைவர் அ. அறிவொளி, திருச்சி – பேசும் ஓலைச் சுவடிகள் பற்றி…

‘அமானுஷ்யம்’ என்றால் – மனிதனால் பேசப்படாத, மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி பேசுவதற்கு அமானுஷ்யம் என்று பெயர். மனிதன் எழுப்புவது மனுஷ்யம். மனிதன் இல்லாமல் ஒரு சக்தி எழுப்பினால் அமானுஷ்யம். இந்த மாதிரியான ஒரு கலை, நம்முடைய நாட்டில் மட்டும் அல்ல… பல நாடுகளில் உண்டு…. ஆனால் இந்திய நாட்டில், அதுவும், தென் தமிழ்நாட்டில் இதை நன்றாக வளர்த்து வைத்திருக்கிறார்கள். இதை பொய்யென்று நினைத்துக் கொண்டு நம்பிக்கையில்லாததினால் இந்தக்கலை பாழ்பட்டு, போகின்றது. இதை நான் முழுவதும் படித்துப் பார்த்தேன்; அழகான செய்திகள் இதிலே இருக்கின்றன.

 

எஸ். ஜெயந்திநாதன், பொறுப்பாசிரியர், ஜோதிட வாசல், மதுரை – அமானுஷ்யமும் அற்புத நிகழ்வுகளும் பற்றி…

இந்த நூலில் பல விஷயங்கள்அனுபவப்பட்டு அனுபவித்த சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே உள்ளன. எதுவும் கற்பனையாக இந்நூலில் ஆசிரியர் ஒரு இடத்தில் கூட கூறவில்லை. தன்னுடைய அருள் ஆற்றலை உணர்ந்திருந்தாலும் ‘தான்’ என்ற கர்வம் துளி கூட இல்லாமல்“நான் ஒரு கருவி மட்டுமே! என்னை இயக்குவது இறை சக்தியே!” என்று பல இடங்களில் இறைவனை முன்னிலைப் படுத்தியிருப்பது, இந்நூலில் ஆசிரியரின் தன்னடக்கத்தை பறை சாற்றுகிறது. இந்நூல் ஆசிரியர் இறந்தவரின்ஆன்மா உயிர் வாழ்கிறது என்றும், அந்த ஆன்மாக்களில் நல்லதைச் செய்பவை, கெடுதலை செய்பவை என்று இருவகையாகப் பிரித்து உதாரணத்துடன் விளக்கியுள்ளார். இது நிதர்சனமான உண்மை!

 

 இந்திரா சௌந்தர்ராஜன், எழுத்தாளர் – பிரபஞ்ச வசியம் பற்றி…

ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தை நான் வாசித்து முடித்தேன். ஆனந்தவேலுக்கு மனித வாழ்வை ஊடுருவி நோக்கும் ஆற்றல் நிரம்பியிருப்பதை எண்ணி நான் ஆச்சரியப்பட்டேன். அந்த ஆற்றலால் பலருக்கு நன்மை ஏற்பட்டு அவர்கள் நலமோடு திகழ்வதையும் எண்ணி மகிழ்ந்தேன். சில அனுபவங்கள் பெரிதும் சிலிர்ப்பை தந்தன. மனித வாழ்வை ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்து வாழ்வு குறித்துப் பலவாறு சிந்திக்க இந்த நூல் உதவும்.

 

அதிர்ஷ்டம் ஜோதிடபானு C. சுப்ரமணியம், ஆசிரியர் – பாலஜோதிடம், சேலம் – பிரபஞ்ச வசியம்பற்றி…

ஜோதிடப் பிரிவுகளில் “டாரட்” ஒரு முறை இதை அவர் பயின்று ஆய்வு செய்து நாடிவரும் அன்பர்களுக்கு அவர் வருங்காலப் பலனை சொல்லி வழி நடத்துகிறார் எண்ணும்போது அவர் கற்ற கலைக்கும் மேலாக அவர் ஆன்மார்த்த மூர்த்தியாக நம்பி வழிபடும் கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர், அவர் நாவில் நின்று பலன் சொல்ல வைக்கிறார் என்பதே உண்மை!

அவரிடம் பழகிப் பயன் பெற்றவர்களின் பாராட்டும், சொந்த அனுபவமும் ஆனந்தவேலின் ஆற்றலை நிரூபிக்கிறது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு ஆற்றல் புதைந்து கிடக்கிறது. அதைக் காலம் தான் வெளிப்படுத்தும். அந்த காலத்தையே கடவுளாகக் கண்டவர்கள் தான் சித்தர்கள்.

கடைசி அத்தியாயமாக “பிரபஞ்ச வசியம்” என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பது தான் என்னை வசியம் பண்ணியது. அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்து அவரை நாடி, பிரச்சினைகளோடு வருகிறவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்த்து வழிகாட்டி நடத்துகிறார் என்பதைப் பயன் பெற்றவர்களின் பாராட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது.

இப்படியொரு ஆற்றலைப் பெற அவர் உழைத்த உழைப்புப் படித்த படிப்பு – செய்த தவம் – அனுபவ சாதனை – அபூர்வமானதே!

 

 எஸ். ஜெயந்திநாதன், பொறுப்பாசிரியர், ஜோதிட வாசல், மதுரை – பிரபஞ்ச வசியம் பற்றி…

தன்னிடம் உள்ள இறை சக்தியால் பிராப்தம் உள்ளவர்கள் இவரை அணுகுகிற பொழுது அவர்களது பிரச்சனைகள் மறைந்துவிடுவது பற்றிய விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி இந்நூலில் விபரித்துள்ளார். சான்றாக இவரிடம் பலன் அடைந்த அன்பர்களின் உணர்ச்சி பூர்வமான கடிதங்களையும் இந்நூலில் பிரசுகரித்துள்ளார். அமானுஷ்ய சக்தி நிறைந்துள்ள அன்பர் எம். ஆர். ஆனந்தவேலின் அருட்தொண்டு தொடரட்டும். வாழ்வில் விடியலைத் தேடும் உள்ளங்கள் இவரை அணுகி பயன் பெறட்டும் என்று வாழ்த்தி அமைகிறேன்.

 

 மீனம் K.S. மணிபட்டாச்சாரியர், நிறுவனர், ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் – பிரபஞ்ச வசியம் பற்றி…

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரமாகும். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாயப் பயன்படுத்துவது அவசியம். இதை மிகச்சரியாக உணர்ந்து சேவையாற்றி வருகிறார் இந்நூலாசிரியர்.

தனக்குள் இருக்கும் இறையாற்றலை உணருதல் என்பது, சாஸ்திரம் கற்றோருக்கு இன்றியமையாததாகும். இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதைப் பூரணமாக உணர்ந்து இறைவனிடத்தில் சரணாகதி செய்து, தனக்குள் ஓர் ஆத்மானுபூமியை ஏற்படுத்திக் கொண்டு, பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொண்டு இறையருளால் பலனுரைத்து வரும் ஓர் கலியுகச்சித்தரால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்ச வசியம், அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய அற்புதநூல்!

 

அதிர்ஷ்டம் ஜோதிடபானு C. சுப்ரமணியம், ஆசிரியர் – பாலஜோதிடம், சேலம் – வசியம் ஒரு ரகசியம் பற்றி…

சித்தர்களின் தொடர்பும், வழிபாடும் இவரை வழிநடத்துவதால் இவருடைய வாக்கிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சித்தர்களின் அருள்வாக்காகவே அமைகிறது. இவரிடம் பலன் கேட்டவர்களின் அனுபவங்களே அதற்கு ஆதாரமாக விளங்குகிறது.

பிரச்சினைகளோடு (லௌகீக பிரச்சினைகளோடு) இவரை நாடிவரும் பலருக்கு தீர்வு சொல்லுகிற முறை “அமானுஷ்யமானது!” அதற்குரிய பரிகார முறைகளும் “அமானுஷ்யமானது”. இது எப்படி சாத்தியம்? அற்புதமான சித்தர்களையும் அருளார்களையும் சத்குருநாதர்களையும் அணுகி பயின்று – ஆசிபெற்றுள்ளார். அதனால் இவர் சொல்வது ஆரூடமா? ஜோதிடமா? பிரசன்னமா? அருள்வாக்கா? தெய்வாக்கா? அதுதான் ரகசியம்!

 

எஸ். ஜெயந்திநாதன், பொறுப்பாசிரியர், ஜோதிட வாசல், மதுரை – வசியம் ஒரு ரகசியம் பற்றி…

மானுட மனத்திற்குள் இருக்கும் விசேஷமான அந்த ஏழாவது அறிவான அமானுஷ்ய சக்தியே இவரது உண்மையான உயர்ந்த அடையாளம். சாதாரணமாக யாராலும் சாதிக்க முடியாத பல அபூர்வ விஷயங்களை நடத்திக்காட்டி… அந்த விஷயங்களில் சிலவற்றை அடக்கத்துடன் “வசியம் ஒரு ரகசியம்” என்ற இவரது இந்த மூன்றாவது நூல் மூலம் தொகுத்துத் தந்திருக்கிறார்.

தன்னால் நடத்திக் காட்டப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் “தன்னால் தான் நடந்தது” என்று கர்வமுடன் கூறிக் கொள்ளாமல்…. பாதிக்கப்பட்டவரின் கர்மா இடம் கொடுத்ததால் தான் நல்லது நடந்தது என்று இவர் சொல்வது – இவரது அடக்கத்திற்கு சாட்சியமாய் இந்நூலில் அமைந்துள்ளது.

error: Content is protected !!
Details available only for Indian languages
Settings Settings reset
Help
Indian language typing help
View Detailed Help