அமானுஷ்யம்

சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்டது அமானுஷ்யம். இதை ஒருவருடைய வாழ்க்கையில் சில நேரங்களில் பார்க்கவோ – உணரவோ முடிந்தாலும், நிரூபிக்க முடியாது.

அமானுஷ்யம் என்பது ஆவிகள் சம்மந்தப்பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள். உண்மைதான்! ஆனால், அதுமட்டுமே அமானுஷ்யம் அல்ல!

ஆன்மீகம் – மற்றும் மூலிகைகள் – ஏன் விபூதிக்குள்ளும் கூட அமானுஷ்ய விஷயங்கள் உண்டு.

நான் பார்க்கும் ‘டாரட்’ கார்டுக்குள்ளும் எத்தனையோ விதமான அமானுஷ்ய சக்திகள் புதைந்து போய் மறைந்துள்ளது. காரணம் மற்றவர்கள் ‘டாரட் கார்டை’ பயன்படுத்தி பலன் சொல்வதைப் போல நான் இல்லை; இது முழுக்க ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் கலந்த கலவையாகவே பார்க்கிறேன், கையாள்கிறேன்.

ஆன்மீகம் எப்படி நம் உள்ளுணர்வை பிரதிபலிக்கிறதோ அதைப் போலவே அமானுஷ்யமும் உணர்த்துகிறது.

ஜாதகம் நான் படித்திருந்தாலும் யாரிடமும் ஜாதகத்தை வாங்கிபலன் சொல்வதில்லை. ‘டாரட் கார்டு’ மூலமாக மட்டுமே பலன் சொல்லிவருகிறேன்.

எல்லா பிரச்சனைகளுக்கும் இதில் தீர்வு கிடைக்குமா? – என்றால் அவரவர்களுடைய ‘கர்மவினை’ ஒத்துழைக்கும் பட்சத்தில் கட்டாயம் தீர்வு உண்டு.

வருகிறவர்கள் எல்லோருக்கும் நான் பார்ப்பதும் இல்லை. இவருக்கு சொன்னால் நடக்கும் என்றுஉணர்த்தினால் மட்டுமே பார்க்கிறேன். இல்லை எனில் ஓரிரு மாதம் கழித்து வரச் சொல்கிறேன்.

நான் சொல்லக் கூடிய பரிகாரங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை, சாஸ்திரத்தில் இல்லாத பரிகாரங்கள் பலிக்குமா? என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால், எப்படி நடந்தது? எதனால் நடந்தது? என்று யாருமே நம்ப முடியாத வண்ணம் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் அமானுஷ்யத்தின் செயல்பாடுகள் உள்ளது.

நமக்குத் தெரிந்ததை மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்ப முடியாதவாறு நடந்துவிட்டால் அது தான் அமானுஷ்யம்.

error: Content is protected !!
Details available only for Indian languages
Settings Settings reset
Help
Indian language typing help
View Detailed Help