மந்திரம் – மாந்திரீகம்

மந்திரம் என்பது மனித குலத்திற்கும் அப்பாற்பட்ட சக்தி. இதை நல்லவற்றுக்காகவும் பயன்படுத்தலாம், கெட்டவைகளுக்காகவும் பயன்படுத்தலாம். இத்தகைய கெடுதல் செய்யக்கூடிய மந்திரங்களை ஒருவர் கற்று, அதனுள்ளே ஆழமாகச் சென்று ஆராய்ந்தால் அதனுடைய சக்தியை உணரமுடியும். இத்தகைய மந்திரம் கற்று அதனால் பெரிய சக்தியுடையவராக காட்டிக்கொண்டால் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் மன நிம்மதி கிடைக்காது. ஒருவரை அழித்து இன்னொருவர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இல்லறம் இனிக்காது. ஏதோ ஒரு வகையில் துன்பம் அனுபவிக்க நேரிடும் என்பது உண்மை. இதனால் தான் இதை ’மாந்திரீகம்’ என்கிறார்கள்.

ஆனால் மந்திரத்தில் நல்லதும் உண்டு. ஒரு சராசரி மனிதன் தன்னுடைய வாழ்நாளில் நிம்மதியாக இருப்பதற்கும் அதற்கு துணையாக தெய்வத்தின் அனுகிரகம் கிடைப்பதற்கும் ஏராளமான மந்திரங்கள் இருந்தபோதிலும் நல்ல குருவைத் தேடிப்பிடித்து அவர் வழிகாட்டும் பாதையில் நடக்கத் தொடங்கினால் இத்தகைய மந்திரத்தின் மகிமையை உணரலாம்.

மந்திரத்தில் எட்டு விதமான சித்துக்கள் உள்ளது. எளிதில் வசியமாகும் சித்துக்களும் இதில் அடங்கும். வசியம், ஆகருடணம், தம்பனம், பேதனம், மோகனம், உச்சாடனம், வித்து வேடனம், மாரணம் போன்றவை.

இதில் உச்சாடனம் மற்றும் மாரணத்தின் மூலம் நல்லதும் செய்யலாம். மற்றவர்களால் தம்மீது ஏவப்படும் ஏவல், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகளிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ளலாம். இதில் பல வழிமுறைகள் உள்ளது.

error: Content is protected !!
Details available only for Indian languages
Settings Settings reset
Help
Indian language typing help
View Detailed Help