மூலிகைகள்

மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சக்திகளை உள்ளடக்கிய மூலிகைகள் இன்றும் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தேடிப்பிடித்து முறையாக எடுத்து அதற்கு மந்திரசக்திகள் மூலம் உயிரோட்டம் கொடுத்தால் அந்த மூலிகை பேசும். இது உண்மையா? என நினைக்கலாம்.

மூன்று தலைமுறை சொத்துக்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்காமல் ஒருவரே அனுபவித்து வந்தார். பஞ்ச பாண்டவர்களைப் போல ‘கொடுப்பதைக்கொடு’ – என்று கேட்டும் கொடுக்கமனம் வரவில்லை. ஆனால் யாருக்கு சொத்து இல்லை என்று சொன்னாரோ, அவர்கள் சொத்தை விற்று ஜெயித்துவிட்டார்கள். இது நடந்த உண்மை!

அதேபோல, கனடாவிலிருந்து நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, “சார், பேய் இருப்பது என்று சொல்வதெல்லாம் உண்மையா? அதைப் பார்க்க முடியுமா?” – என்று கேட்டார். அவருக்கு ஒருசில மூலிகைகள் அனுப்பி, நான் சொன்னபடி செய்து வரச் சொன்னேன். அப்படிச் செய்து வரும் போது, ‘நம்ப முடியாது’ – என்று பேசிய நண்பரை மிரளவைத்தது ஒரு உருவம். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் மிரட்டி வந்த அந்த உருவத்தை, அவர் வணங்கி வரும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையிலிருந்து, டிவியில் வருவதைப் போல – அப்படியே ஒரு ஆஞ்சநேயர் கையில் கதாயுதத்தோடு பாய்ந்து வந்து அந்த உருவத்தைத் தாக்கியதால் அது ஓடிப்போனதாகவும் எனக்குச் சொன்னவர், தொடர்ந்து பேசினார்.

‘சார், எல்லோரும் சொல்வதைப் போலத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் என்று உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன். ஆனால் சிலமூலிகைகள் ‘இது எல்லாம் செய்யும்’ என்பதை உணர்ந்து கொண்டேன். அதைவிட ஆஞ்சநேயரை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்கள். நான் இப்போது நன்றாக உணர்ந்து கொண்டேன்’, என்றார்.

ஆக, மூலிகைகளின் ஆற்றல் அளவிடமுடியாது. அப்படிப்பட்ட மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து உயிரோட்டம் பெறச் செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் ஒருசில இடர்பாடுகளை ஜெயிக்கலாம், ஒரு சிலதடைகளை தகர்க்கலாம்!

error: Content is protected !!
Details available only for Indian languages
Settings Settings reset
Help
Indian language typing help
View Detailed Help